நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்ற நிபந்தனையை மீறிய உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உக்கரமான போர் ஏற்பட்டுள்ள நிலையில், நாளுக்குநாள் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கையும், குண்டு மழைப் பொழிவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு சற்றும் பின்வாங்காமல் இருக்கும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் புதுமையான ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் பயன்படுத்தப்படுவதால், உலக மக்களிடையே பீதியும், அச்சமும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஏனென்றால், உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை கொண்ட நாடாக ரஷ்யா இருக்கிறது. இந்த போரின் தீவிரம் குறையாத சூழலில், அடுத்தடுத்த நகர்வுகளால் ஆணு ஆயுத போருக்கு வழிவகுக்குமோ? என்ற அச்சம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஐசிஏஎன்என் இந்த போர் குறித்து லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள தகவலின்படி, பேச்சுவார்த்தையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அணு ஆயுத போருக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
2017 -ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற அமைப்பான ஐசிஏன்என், அணு குண்டு தாக்குதல் நடைபெற்றால் உலகம் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கையின்படி, ரஷ்யா – உக்ரைன் போரில் அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டால் அரைமணி நேரத்தில் 100 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரித்துள்ளது. மேலும், அதன்பிறகு ஏற்படும் விளைவுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசி பட்டினியை எதிர்கொள்வார்கள் என்றும், சுகாதாரப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!
மும்பை போன்ற நெருக்கடியான நகரங்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டால் ஒரு வாரத்தில் 8 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடும் என அந்த அமைப்பு கூறியுள்ளது. பூமியின் வெப்ப நிலை கடுமையாக உயரும், மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படும், விவசாயம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்றும் ஐஏசிஎன்என் அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா வீசிய குண்டின் பின்விளைவுகள் இன்னும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR