அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது இந்திய கிரிக்கெட் அணி

டுப்லின்,
இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் பிறகு அயர்லாந்து நாட்டிற்கு செல்லும் இந்திய அணி ஜூன் 26 ஆம் தேதி முதல் 20 ஓவர் போட்டியில்  பங்கேற்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை அயர்லாந்து கிரிக்கெட் வாரியம்  தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.