அதீத கடனில் தவிக்கும் ஏர் இந்தியாவைப் பல முயற்சிகளுக்குப் பின் டாடா குழுமத்திற்கு மத்திய அரசு சுமார் 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவிற்குப் புதிய சிஇஓ தேர்வு செய்யும் பணியில் டாடா குழுமம் பல மாதங்களாக ஆலோசனை செய்து துருக்கி ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் ஆய்சி தேர்வு செய்தது.
ஏர் இந்தியாவின் சிஇஓவாக இல்கர் ஆய்சி-ஐ நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால், இல்கர் ஆய்சி தானாக முன்வந்து டாடா குழுமம் கொடுத்துள்ள ஏர் இந்தியா சிஇஓ பதவி வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
இல்கர் ஆய்சி-யின் இந்த முடிவுக்கு என்ன காரணம்..? மத்திய அரசு அனுமதி அளிக்காதது ஏன்..?
இல்கர் ஆய்சி
இல்கர் ஆய்சி 2022 ஜனவரி வரையில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக இருந்தது அனைவருக்கும் தெரியும், ஆனால் இதற்கு முன்பு அய்சி 1994 இல் தற்போது துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் தயிப் எர்டோகனின் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ISPAT அமைப்பு
2020 இல் நோர்டிக் மானிட்டரால் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்களின்படி, துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் நெருங்கிய உதவியாளரும், துருக்கியின் முதலீட்டு ஆதரவு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (ISPAT) அப்போதைய தலைவராகவும் இல்கர் ஆய்சி திகழ்ந்துள்ளார்.
அல் கொய்தா யாசின் அல்-காதி
ISPAT அமைப்பின் தலைவராக இல்கர் ஆய்சி இருந்த காலகட்டத்தில் தீவிரவாத அமைப்பான அல் கொய்தா-வின் நிதியாளர் (Financier) யாசின் அல்-காதி உடன் இணைந்து ஒரு முறை முதலீடுகள் மற்றும் தனியார் வணிகங்களை இல்கர் ஆய்சி எளிதாக்கினார். யாசின் அல்-காதி எகிப்தில் பிறந்த சவுதி நாட்டவர், அவர் ஒரு காலத்தில் அமெரிக்கக் கருவூலம் மற்றும் ஐ.நா அல்-கொய்தா தடைக் குழுவால் தடை செய்யப்பட்டவர் ஆவார்.
அனல் மின் நிலையங்கள்
துருக்கியில் ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாகத் துருக்கி நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒயர்டேப்பின் படி, ஆகஸ்ட் 18, 2013 அன்று அய்சி அல்-காதியை ரகசியமாகச் சந்தித்து, அனல் மின் நிலையங்களைத் தனியார்மயமாக்குவதற்கான டெண்டர்களை ஏலம் எடுக்க ஊக்குவித்தார்.
எர்டோகன்
அப்போதைய பிரதம மந்திரி எர்டோகனிடம் அவர் தனியார்மயமாக்கும் திட்டத்தை விளக்குவதற்கு முன், ஏலத்தில் பங்குகொள்ள ஏற்பாடுகளை முடிக்குமாறு அல்-காதியிடம் இல்கர் ஆய்சி கேட்டுக் கொண்டது தெரியவந்துள்ளது.
இல்கர் ஆய்சி ஆதிக்கம்
வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கையாள்வதற்கான முழு அதிகாரத்தையும் இஸ்பாட் நிறுவனத்திற்கு எர்டோகன் வழங்கியுள்ளார் என்றும், எரிசக்தி துறையில் வெளிநாட்டு முதலீடுகளில் தலையிட வேண்டாம் என்றும் தனது எரிசக்தி அமைச்சருக்கு அறிவுறுத்தினார் என்றும் அல்-காதியிடம் இல்கர் ஆய்சி உறுதியளித்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
எர்டோகன் மகன் பிலால்
இதேபோல் அல்-காதி மற்றும் எர்டோகனின் மகன் பிலால் மீது இஸ்தான்புல்லில் ஊழல் தொடர்பான ஒரு வழக்கில் தொடர்பாக டிசம்பர் 25, 2013 வாரென்ட் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வாரன்ட் மூலம் துருக்கி மின் உற்பத்தி நிலையங்களைத் தனியார்மயமாக்குவதில் அல்-காதி பங்கேற்க முடியவில்லை. மேலும் எர்டோகன் ஆதிக்கத்தின் மூலம் உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டதாக நோர்டிக் மானிட்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரே பள்ளி
மேலும் இல்கர் ஆய்சி-யும், துருக்கி அதிபர் எர்டோகனின் மகன் பிலால்-ம் ஒரே பள்ளியில் படித்தவர்கள் (Kartal Imam Hatip High School), இதனாலேயே எர்டோகன்-க்கு நெருங்கியவராக இருந்தார், 1994-98 வரையில் அவருக்கு ஆலோசகராகவும் இல்கர் ஆய்சி திகழ்ந்தார்.
துருக்கி ஏர்லைன்ஸ்
எர்டோகனின் வழக்கறிஞர் அர்சு அகலின் (Arzu Akalin) 2014 இல் துருக்கி ஏர்லைன்ஸ் குழுவில் நியமிக்கப்பட்டார், அய்சி 2015 இல் துருக்கி ஏர்லைன்ஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். எர்டோகன் இஸ்தான்புல் மேயராக இருந்த போது நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான TURGEV-ல் அர்சு 1996 இல் தலைவராகவும் இருந்தார்.
TURGEV அமைப்பு
எர்டோகனின் மகன் மற்றும் மகள், பிலால் மற்றும் எஸ்ரா அல்பைராக் இருவரும் TURGEV அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தனர். அல்-கொய்தா, செச்சென் பிரிவினைவாதிகள், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஹமாஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்ததாக TURGEV மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ilker Ayci suspected links with Al Qaeda, declines Tata Sons offer to be new Air India CEO
Ilker Ayci suspected links with Al Qaeda, declines Tata Sons offer to be new Air India CEO அல் கொய்தா உடன் இல்கர் ஆய்சி-க்கு தொடர்பா.. உண்மை என்ன..? ஏர் இந்தியா தப்பித்தது..!!