இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.
இதே கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தையானது, மிக மோசமான அளவில் சரிவினைக் கண்டு வந்தது.
தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கும் மத்தியில் 7வது நாளாக ரஷ்யா – உக்ரைன் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இதில் பல ஆயிரம் பொதுமக்கள், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்எ என பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதற்கிடையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, ரஷ்யா துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா பேச்சு வார்த்தை கைகொடுக்குமா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்!
பொருளாதாரம் பாதிக்கும்
இதற்கிடையில் ரஷ்யாவின் மீது பல நாடுகளும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஏற்கனவே ரஷ்யாவின் நாணயமான ரூபிள் 30% மதிப்பினையும், ரஷ்ய பங்கு சந்தைகள் 40% சரிவிலும் காணப்படுகின்றன. இந்த நிலையில் அடுத்தடுத்த தடைகள், நிறுவனங்களின் வணிக உறவு விரிசல் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில், அதன் பொருளாதாரம் நிச்சயம் சரிவினைக் சந்திக்கும் எனலாம்.
சப்ளை சங்கிலியில் பாதிப்பு
இது சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியிலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பணவீக்கமும் ஏற்கனவே பல நாடுகளிலும் பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், அது இன்னும் பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கலாம். இது வளர்ச்சியினை மெதுவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்
சர்வதேச சந்தைகள்
உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பெரும்பாலான ஆசிய சந்தைகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக இந்திய சந்தையானது கடந்த அமர்வில் மகா சிவராத்திரி காரணமாக விடுமுறையாகும். எனினும் இன்று அதன் எதிரொலி இருக்கலாம் என்றும்,. இன்று அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தையானது சரிவிலேயே காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 634.29 புள்ளிகள் குறைந்து, 55,612.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 173.10 புள்ளிகள் குறைந்து, 16,620.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1544 பங்குகள் ஏற்றத்திலும், 611 பங்குகள் சரிவிலும், 68 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி 2% மேலாக சரிவில் காணப்படுகின்றது. நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஆட்டோ 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கம்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால் கோ, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், எம் & எம், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
தற்போது நிலவரம்
10.13 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 795.94 புள்ளிகள் குறைந்து, 55,451.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி192.35 புள்ளிகள் குறைந்து, 16,601.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex crashed above 700 points, nifty above 16,600
opening bell: sensex crashed above 700 points, nifty above 16,600/ஆட்டம் காட்டும் ரஷ்யா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்!