இந்தியப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சென்ற 2021-ஆம் ஆண்டில் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனமான KNIGHT FRANK தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 226 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புள்ள பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 287 லிருந்து 13 ஆயிரத்து 637ஆக உயர்ந்துள்ளது. இதில், பெங்களூருவில் அதிகபட்ச வளர்ச்சியாக 17.1 சதவீதம் அதாவது 352 பேரும், டெல்லியில் 210 பேரும், மும்பையில் ஆயிரத்து 596 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தைகள் மற்றும் டிஜிட்டலுக்கு மாறியதுமே காரணம் என KNIGHT FRANK நிறுவனத்தின் தலைவர் ஷிஷிர் பெய்ஜல் தெரிவித்துள்ளார். அதேபோல, நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புள்ள பெரும் பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM