சென்னை: சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதியாகும்பட்சத்தில், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.