இலங்கையிலுள்ள பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான ATM அட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர்களுக்கு ATM அட்டை வழங்கும் செயற்பாடு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாமலும் புதிய அட்டையைக் கோர முடியாமலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிய வருகிறது.
எந்த நேரத்தில் பணத்தை எடுக்கும் வசதியை இழந்த வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணத்தை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கி அட்டைகளை இறக்குமதி செய்வதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால் அவ்வகை அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.