பீஜிங்:உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில், அப்பாவி மக்கள் பலியாவதற்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரனை மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், நேற்று ஏழாம் நாளாக தொடர்ந்தது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாவது கவலையளிப்பதாக, சீன அமைச்சர் அவரிடம் தெரிவித்தார்.எனினும், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை விமர்சிக்காத சீன அமைச்சர் வாங்க் யி, ‘இரு நாடுகளும் போரை நிறுத்தி, சமாதான பேச்சை மேற்கொள்ள வேண்டும்’ என, வலியுறுத்தினார்.’ஏட்டிக்கு போட்டி வேண்டாம்’ ”அமெரிக்க மக்களுடன் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்ள வேண்டாம் என, சீனா அதிபர் ஷீ ஜிங்பிங்கிடம் கூறினேன்,” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
அமெரிக்க பார்லி.,யின் வருடாந்திர கூட்டுக் கூட்டத்தில், அந்நாட்டு அதிபர் பைடன் முதல் உரையில் பேசியதாவது: அமெரிக்கா மற்றும் அமெரிக்க மக்களுடன் ஏட்டிக்கு போட்டியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, சீன அதிபர் ஜிங்பிங்கிடம் தெரிவித்தேன். பதிலாக சீனாவில் வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
பாக்., மவுனம்
ரஷ்யா – உக்ரைன் விவகாரம் பற்றி விவாதிக்க, ஐ.நா., பொது சபையின் சிறப்புக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் துவங்கியது.இதில் ஐ.நா.,வில் உறுப்பினர்களாக உள்ள ௧௯௩ நாடுகளின் துாதர்கள் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை கூறி வருகின்றனர். 2வது நாளாக நேற்று நடந்த கூட்டத்தில் பாக்., துாதர் பேச இருந்தார். ஆனால், அவர் மவுனம் காத்தார். இக்கூட்டத்தில் நேற்று முன்தினம், இந்திய துாதர் டி.எஸ். திருமூர்த்தி பேசியது குறிப்பிடத்தக்கது.
Advertisement