புதுச்சேரி : உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தவர்களின் விபரங்களை தெரிவிக்க, அரசு சார்பில் கூடுதலாக வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அங்கு தங்கியுள்ள புதுச்சேரி மாணவர்கள், தொழிலாளர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களை பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதனையொட்டி, உக்ரைனில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை சேகரிக்க புதுச்சேரி அரசு சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று புதிதாக 94448 60663 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உக்ரைனில் சிக்கித் தவிப்போரின் விவரங்களை தெரிவிக்க மேற்குறிப்பிட்ட புதிய வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி : உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தவர்களின் விபரங்களை தெரிவிக்க, அரசு சார்பில் கூடுதலாக வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.nsimg2973641nsimgகலெக்டர் அலுவலக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.