உக்ரைன்
உக்ரைன் நகரில் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல் நடந்து வருகிறது. இதையொட்டி இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இவ்வாறு உக்ரைனின் கார்கில் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்ற இந்திய மாணவர் நவீன் ரஷ்ய குண்டு வீச்சில் உயிர் இழந்தார். அவருடைய மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் மாவட்டம் கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் உக்ரைன் நேரப்படி மாலை 6 மணி *இந்திய நேரம் 9.30)க்குள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் கல்வி கற்று வரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சந்தன் ஜிண்டால் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 22 வயதாகும் இவர் வின்னிட்சியா தேசிய மருத்துவ கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். இவருக்கு மூளை வாதம் ஏற்பட்டு வின்னிட்சிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் திடீரென மரணம் அடைந்துள்ளார். இவரது உடலை இந்தியா கொண்டுவர பெற்றோர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.