இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் அழைத்த நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்தில் வந்து பணியாற்ற அறிவித்தது.
இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..!
இதைத் தொடர்ந்து நாட்டில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் தற்போது அடுத்தடுத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
விப்ரோ நிறுவனம்
இந்திய ஐடி நிறுவனங்களில் முதலாவதாக விப்ரோ நிறுவனம் மூத்த மேனேஜர்கள் மற்றும் அதற்கு மேல் பதவிகளில் இருப்பவர்கள் முதல்கட்டமாக வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த முறை மார்ச் 2 முதல் நடைமுறைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல்
விப்ரோ போல் அல்லாமல் இன்போசிஸ் மற்றும் பகுதி பகுதியாக ஊழியர்ககளை ஏப்ரல் மாதத்தில் இருந்து அழைக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஹெச்சிஎல் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிலான ஊழியர்களை அலுவலகத்திற்கு ஏற்கனவே அழைத்துள்ளது. இந்நிலையில் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் மத்தியிலும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.
ஹைப்ரிட் முறை
கடந்த 2.5 வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்களும் சரி, ஐடி ஊழியர்களும் சரி வீட்டில் இருந்து பணியாற்றினாலும் சிறப்பாக இயங்க முடியும் என நிரூபணமாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஹைப்ரிட் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் நிறுவனங்கள் அதிகப்படியான செலவுகளைக் குறைப்பதை மட்டும் அல்லாமல் அதிகப்படியான ஊழியர்களையும் நியமிக்க முடியும்.
2 அல்லது 3 நாள் மட்டுமே
இந்திய ஐடி நிறுவனங்கள் ஹைப்ரிட் முறையை அமலாக்கம் செய்தால் அதிகப்படியாக ஒரு வாரத்தில் 2 அல்லது 3 நாள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். மற்ற நாட்களில் வீட்டில் இருந்து தான் பணியாற்ற வேண்டும், இதனால் அனைத்து ஊழியர்களும் சொந்த ஊரில் இருந்து பணியாற்றும் நகரங்களுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. இதேநேரத்தில் பல நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கிறது.
குட்டி ஆப்ஸ் செட்அப்
இதனால் இனி நாட்டின் முன்னணி ஐடி நிறுவனத்தில் 100 சதவீத ஊழியர்கள் அலுவலகம் வந்து பணியாற்றும் நிலை இருக்காது என்பது 99 சதவீதம் உறுதியாகியுள்ளது. எனவே ஐடி ஊழியர்கள் வீட்டில் நிரந்தரமாக ஆப்ஸ் செட்அப் ரெடி செய்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது.
Good News: 100% work from office may be old fashion; IT companies strictly follows hybrid Work culture
Good News: 100% work from office may be old fashion; IT companies strictly follows hybrid Work culture ஐடி ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. சீக்கிரம் வீட்டிலேயே குட்டி ஆபீஸ் ரெடி பண்ணுங்க..! #WorkFromOffice #WFH