தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.
7 வார்டுகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளனர். இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி, நகராட்சிகளில் கமிஷனர்கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் செய்துள்ளனர். தேர்தலில் வெற்றிபெற்ற நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள், அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.