கீவ்: 7 வது நாளாக தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகர் மீது கடுமையான தாக்குதலை நடத்தின.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில், உக்ரைன் மீது தொடர்ச்சியாக ரஷ்யா குண்டுமழை பொழிந்து வருகிறது. தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நேடோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ரஷ்ய விமானப்படை வான்பரப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். நேடோ ஒருவேலை எங்களின் உறுப்பினர் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், சட்டத்திற்கு உட்பட்டு அளிக்க கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தையாவது நல்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ராணுவ கட்டுப்பாட்டில் பலத்த பாதுகாப்புடன் இந்த பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது, அரசு செய்தி சேனல் கோபுரம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. அதில் 5 பேர் கொல்லப்பட்டதாக ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகள், கார்கிவ் நகர் மீது இன்று கடுமையான தாக்குதலை நடத்தின. அந்த நகரில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ராணுவ அகாடமி, மருத்துவமனைகள் ஆகியவை குறி வைத்து தாக்கப்பட்டன.
Advertisement