புதுடில்லி: நாட்டில், காற்று மாசுபாடு காரணமாக நிகழும் உயிரிழப்புகள் 20 ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்து உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையின் விபரம்:காற்று மாசு நுரையீரல்மற்றும் சுவாசக்குழாயில் ஊடுருவி நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதுடன்,இதய மற்றும் சுவாச பிரச்னைகளை உருவாக்குகிறது.
இந்தியாவில் 2019ல் நால்வரில் ஒருவரின் மரணத்திற்கு காற்று மாசு காரணமாக இருந்து உள்ளது. அதேபோல், 2019ல் சர்வதேச அளவில் காற்று மாசு தொடர்பான உடல் பாதிப்புகளால் 4.76 லட்சம்பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 1.16 லட்சம்.ஒருவர் முன்கூட்டியே மரணம் அடைதவற்குரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு, மோசமான உணவு ஆகியவற்றுக்கு அடுத்ததாக காற்று மாசு காரணமாக உள்ளது.
இந்தியாவில், 1990ல் காற்று மாசு காரணமாக 2.79 லட்சம் பேர் இறந்துள்ளனர். இது, 2019ல் 2.5 மடங்கு அதிகரித்து 9.80 லட்சமாக பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement