உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யப் படைகள் நாளை கீவ் நகரின் ஏனைய பகுதிகளை தாக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு மேற்கு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கீவ்வில் இருந்து வெளியேற இனி இந்தியர்களை யாரும் இல்லை என்பதால் தூதரகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அதிகாரிகள் மேற்கு பகுதிகளுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள ஏறத்தாழ 12 ஆயிரம் இந்தியர்களை கூடுதல் விமானங்கள் முலம் மீட்க பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.