பெரும்பாலான குடும்பங்களில் அனைவரும் ஒன்றாக இருந்தும் தங்கள் பொழுதை தனியாகவே கழித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஒன்றாக இருந்தும் தனித்திருக்கும்’ (Alone-together) நேரம் என சொல்கின்றனர்.
குழந்தைகளும், பெற்றோர்களும் ஒரே இடத்தில் இருந்தும் தனித்தனியாகவே இருப்பதாக குழந்தைகள் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட இணை ஆய்வறிஞர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட தவறிய இந்திய பெற்றோர்கள் குற்ற உணர்வுடன் இருப்பதாகவும், அழுத்தத்துடன் இருப்பதாகவும் உணர்வதாக கடந்த 2014 வாக்கில் வெளியிடப்பட்ட IKEA பிளே ரிப்போர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM