உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 24 அன்று, ரஷ்யா உக்ரைனில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் நகரை ரஷ்ய இராணுவ படைகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Igor Konashenkov கூறியதாவது, கெர்சன் நகரில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை.
சமூக உள்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாட்டைப் பராமரித்தல், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்தல் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற சிக்கல்களைத் தீர்க்க ரஷ்ய அதிகாரிகள், கெர்சன் நகர நிர்வாகம் மற்றும் பிராந்தியத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
கெர்சனின் உள்கட்டமைப்பு, ஆதரவு வசதிகள் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து ஆகியவை தினசரி அடிப்படையில் செயல்படுகின்றன என Igor Konashenkov தெரிவித்துள்ளார்.