சுவிட்சர்லாந்து தடைகள் விதித்ததால் உடனடியாக பழிக்குப் பழி வாங்கிய ரஷ்யா



ரஷ்யா மீது தடைகள் விதித்த சுவிட்சர்லாந்தை உடனடியாக பழி வாங்கியுள்ளது அந்நாடு.

ஆம், சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், Nord Stream 2 pipeline அலுவலகம் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதை பொறுப்பேற்றுள்ள அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள Zug மாகாணத்தில்தான் அமைந்துள்ளது. Nord Stream 2 pipeline நிறுவனம், ரஷ்ய எரிபொருள் ஜாம்பவானான Gazprom என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது தடைகள் விதித்தன. சுவிட்சர்லாந்தும் தடைகள் விதிக்க வற்புறுத்தப்பட்டது.

ஆகவே, தானும் ரஷ்யா மீது தடைகள் விதிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்தது. அதனால் கோபமடைந்துள்ள ரஷ்ய தரப்பு, பழி வாங்கும் நடவடிக்கையாக Zug மாகாணத்தில் அமைந்துள்ள Nord Stream 2 pipeline அலுவலகத்தில் பணியாற்றும் 140 பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டது.

இந்த தகவலை சுவிஸ் பொருளாதாரத்துறை அமைச்சரும், பெடரல் கவுன்சிலருமான Guy Parmelin வெளியிட்டுள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.