தங்கம் கடத்தல் வழக்கு அமலாக்கத் துறை மீண்டும் சொப்னாவிடம் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சொப்னாவுக்கு உடந்தையாக இருந்ததின் பேரில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்திற்குப் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட சுயசரிதையில்,  ‘சொப்னாவுக்கும், எனக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. ஆனால், அவர் தங்கம் கடத்தியது குறித்து எதுவும் தெரியாது,’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சொப்னா, நானும் சிவசங்கரும் 3 வருடங்கள் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம்.  தங்கம் கடத்தியது அவருக்கு நன்றாக தெரியும். அவர் சொன்னதால் தான், தங்கம் கடத்தலில் முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினேன்,’ என்று தெரிவித்தார். சொப்னா இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி  சொப்னாவிடமும், அவரது கூட்டாளி சரித் குமாரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் 5 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.