தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சர்வதேச சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகின்றது.
கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.இது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
இது இன்னும் குறையுமா? அல்லது தொடர்ந்து ஏற்றம் காணுமா? அடுத்து என செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
16 மாத உச்சம்
தங்கம் விலையானது கடந்த அமர்வில் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில், கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது கடந்த அமர்வில் 10 கிராமுக்கு 1115 ரூபாய் ஏற்றம் கண்டு, 16 மாத உச்சத்தினை எட்டியது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 2500 ரூபாய் சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பாப்பினை ஏற்படுத்தியுள்ளது.
டாலர் மதிப்பு
சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து மீண்டும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம். இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம்.
நீடிக்கும் உக்ரைன் ரஷ்யா பதற்றம்
தொடர்ந்து 7வது நாளாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் பதற்றமானது குறைந்தபடாக இல்லை. மாறாக தொடர்ந்து தாக்குதல் அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. குறிப்பாக பொது மக்கள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த பிரச்சனை இப்போதைக்கு சுமூக நிலையை எட்டுவதும் கேள்விக் குறியாகியுள்ளது. ஆக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பாக்கப்படுகிறது.
பணவீக்கம்
தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில் பணவீக்கமானது உச்சம் தொடலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பாக்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து சந்தையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், புராபிட் புக்கிங் காரணமாக தற்போது சற்று சரிவினைக் கண்டுள்ளது.
எதிர்பார்ப்பு
தொடந்து தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் குறைந்தால் அது வாங்கி வைக்க சரியான வாய்ப்பாக இருக்கும். எனினும் ஃபெடரல் வங்கி கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில், அதில் வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்தான அறிவிப்புகள் வந்தால், தங்கம் விலையானது இன்னும் சற்று அழுத்தம் காணலாம். ஆக குறையும்போது வாங்கி வைக்கலாம்.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 5.80 டாலர்கள் குறைந்து, 1937.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முன்னதாக 1950.50 டாலர்கள் வரையில் சென்று, தற்போது சற்றே குறைந்துள்ளது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைக்கவில்லை. எனினும் இது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.07% சரிந்து, 25.265 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் உச்சம், குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கசற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 115 குறைந்து, 51,711 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் டவுன் ஆகி கிழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்சத்தினையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது.இதில் நடப்பு கான்ட்ராக்ட் இந்த வாரத்தில் எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம். இது தற்போது (மே கான்ட்ராக்ட்) கிலோவுக்கு 414 குறைந்து, 67,765 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தை, இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டிருந்தாலும், ஆபரண தங்கம் விலையானது இன்று பலத்த ஏற்றத்தினை கண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 87 ரூபாய் அதிகரித்து, 4875 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 696 ரூபாய் அதிகரித்து, 39,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 97 ரூபாய் அதிகரித்து, 5,320 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து, 42,560 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போலவே, ஆபரண வெள்ளி விலையும் பலமாக அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.90 ரூபாய் அதிகரித்து, 71.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 719 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1900 ரூபாய் அதிகரித்து, 71,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், சர்வதேச சந்தையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.
gold price on 2nd march 2022: gold prices drop after big jump, is it a right time to invest?
gold price on 2nd march 2022: gold prices drop after big jump, is it a right time to invest?/தங்கம் விலை வீழ்ச்சி.. ஆனாலும் சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.. ஏன்?