சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதியில் பட்ஜெட் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க வரும் 5ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் கூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே நடப்பாண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன. அதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கடந்த மாதம் 8ம் தேதி நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில் விரைவில் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டை தயார் செய்வதற்கான முயற்சி யில் அமைச்சர் பிடிஆர் தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் அவற்றுக்கான சங்க பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதுபோல வேளாண் பட்ஜெட் குறித்தும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இநத் நிலையில், தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க கூடும் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் பட்ஜெட் 18ம் தேதியன்றும், வேளாண்மை பட்ஜெட் 19ம் தேதியன்றும் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.