புதுடெல்லி:
இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 6,915 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 2,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பு விகிதம் 0.96 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.06 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 168 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 223 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,14,246 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14,123 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 38 ஆயிரத்து 673 ஆக உயர்ந்தது. இதன்மூலம் குணம் அடைந்தோர் சதவீதம் 98.60 ஆக அதிகரித்தது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 85,680 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 6,792 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 8,55,862 டோஸ்களும், இதுவரை 177.79 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.