தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.
7 வார்டுகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெயரை கூறியும், அதிமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அவர் பெயரை கூறி பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பெயரைக் கூறி, பானு என்ற கவுன்சிலர் பதவியேற்றுக்கொண்டார். மதுரை 47-வது வார்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து முக அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட பானு வெற்றி பெற்று இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.