ஜப்பானை சேர்ந்த மல்டி நேஷனல் நிறுவனமான தோஷிபா கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சடோஷி சுனகாவா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இது திருத்தப்பட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள், பங்குதாரர்களிடமிருந்து நீண்டகால கோபத்துடன் நிறுவனத்திற்குள் எதிர்ப்பினை தூண்டியுள்ளது.
இதற்கிடையில் தான் இந்த பதவி விலகல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
2800 பேர் பணி நீக்கம்.. CEO ராஜினாமா.. பெலோட்டனில் அதிரடியான பல மாற்றங்கள்..!

மறுசீரமைப்பு தொடரும்
பலவேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நிறுவனம் அதன் மறுசீரமைப்பு திட்டத்தினை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் ஊழல் பிரச்சனையில் சிக்கிய இந்த கூட்டமைப்பு, ஆரம்பத்தில் மூன்றாக பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இது முதலீட்டாளர்களால் பெரிதும் விமர்சனம் செய்யப்பட்டது.

கருத்து வேறுபாடு
கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு மறுசீரமைக்கப்பட்ட திட்டம், இரண்டு நிறுவனங்களாக பிரிந்து, சில வணிகங்களை விற்பனை செய்வதற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தினுள் இன்னும் சில கருத்து வேறுபாடுகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.

விற்பனையா?
இதற்கிடையில் தோஷிபா குறைந்த மார்ஜின் கொண்ட அதன் லிஃப்ட் வணிகத்தினை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சடோஷி சுனகாவா நிறுவனத்தினை பிளவுபடுத்த தூண்டியதாகவும், இந்த நிலையில் தோஷிபா நிறுவனம் பிரியுமா? அதன் மறுசீரமைப்பு திட்டங்கள் என்னவாகும் என்ற அச்சம் இருந்து வருகின்றது.

மறுஆய்வு செய்யப்படும்
சிங்கப்பூரில் உள்ள முதலீட்டு ஆலோசக நிறுவனமான யுனைடெட் ஃபர்ஸ்ட் பார்ட்னர்ஸின் ஆசிய ஆராய்ச்சித் தலைவர் ஜஸ்டின் டாங் கூறுகையில், இந்த பிரிவுத் திட்டம் குறித்து விரைவில் மறுஆய்வு செய்யப்படும். இந்த திட்டம் நிறுவனம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

பல வருட திட்டம்
தோஷிபா நிறுவனத்தில் பல வருடங்களாக நிர்வாக அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் 3 தனித்தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட திட்டமிட்டு வந்தனர். இப்படி பல வருட திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தான் அதன் தலைமை அதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.

என்ன செய்கிறது?
தோஷிபா நிறுவனம் பல்வேறு வகையான மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஒரு பிரபலமான நிறுவனமாகும். இதன் பொருட்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. நிறுவனத்தின் நிர்வாகத்தினுள் ஏற்பட்ட குளறுபடிகள், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் என பல காரணங்களுக்கு மத்தியில் தான் அடுத்தடுத்த சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது.
Toshiba CEO resigns amid opposition to restructuring plans
Toshiba CEO resigns amid opposition to restructuring plans/தோஷிபா கார்ப் CEO திடீர் ராஜினாமா.. ஏன்.. என்ன காரணம் தெரியுமா?