அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர், அவரை கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தார்.
சுதாரித்துக்கொண்ட நீதிபதி பொன் பாண்டியன், பிரகாஷ் தள்ளி விட்டுவிட்டு தப்பித்தார். எதிர்பாராத விதமாக நீதிபதி பொன் பாண்டியன் மீது கத்திக் குத்துச் சம்பவத்தில் சிறிய காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பொன் பாண்டியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதே சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் வைத்தே நீதிபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.