மகளிர் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.
வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, நெருப்பில்லா சமையல் என்ற போட்டி நடத்தப்பட்டது இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் துறை வாரியாக பிரிந்து, நெருப்பில்லாமல் இயற்கை முறையிலான உணவுப் பொருட்களை தயார் செய்தனர்.
கொடுக்கப்பட்ட ஒன்றரை மணிநேரத்தில், இயற்கையிலேயே உணவுப் பொருள்களை மாணவிகள் தயார் செய்திருந்தனர் குறிப்பாக, பயறுவகைகள் தொடங்கி இளநீர் பாயாசம், இதமான நீராகாரங்கள், பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உணவு வகைகள் என பல்வேறு வகையிலான 500-க்கும் மேற்பட்ட உணவுகளை மாணவிகள் காட்சிப்படுத்தினர்.
சமகாலத்தில் உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தவிர்த்து, இயற்கை முறையிலான உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் நெருப்பில்லாத உணவு வகைகள் எத்தனை முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த உணவு திருவிழா அமைந்திருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM