பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம் விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது.
இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரவு அளவிலான விவசாயிகளுக்கும் இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.