ரஷ்யாவைச் சேர்ந்த 6,000 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது.
உக்ரைன் –
ரஷ்யா
இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏழு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை, 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யாவின் தாக்குதல் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ரஷ்யப் படைகளின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. கார்கிவ் நகரை உருக்குலையச் செய்த ரஷ்யப் படைகள், அரசு கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளை நோக்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
நாடு முழுதும் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுத்த அதிரடி முடிவு!
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதல்களில், கடந்த ஆறு நாட்களில், ரஷ்யப் படைகளைச் சேர்ந்த 6,000 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார். மேலும், ரஷ்யாவின் விமானங்கள், 16 ஹெலிகாப்டர்கள், 102 பீரங்கிகள் மற்றும் 536 இலகுரக கவச வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் நாட்டுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.