5.20 லட்சம் அகதிகள்
ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியதில் இருந்து, இதுவரை உக்ரைனை சேர்ந்த 5.20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர். இவர்கள் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இல்லாத மால்டோவா நாடுகளின் எல்லையில் காத்திருக்கின்றனர்.
உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ‘வீடியோ’வில் பேசியதாவது:ரஷ்யா ஒரு பக்கம் எங்களுடன் பேச்சு நடத்திக் கொண்டே, இன்னொரு பக்கம், தாக்குதலை தீவிரப்படுத்தியது, எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதை காட்டுகிறது. ஆனால், நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.
வான்வழியை கோட்டை விட்ட ரஷ்யா
இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், வான்ழியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தான், இருநாடுகளுமே முனைப்புடன் இருக்கும். ஆனால், உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா, ஐந்து நாட்களாகியும், இதுவரை உக்ரைன் வான்வழியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ‘உக்ரைனை மிக எளிதாக வீழ்த்தி விடலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நினைத்ததால், அவர் வான்வழியைப் பற்றி கவலைப்படவில்லை போலிருக்கிறது’ என அமெரிக்க போர் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துாதரக அதிகாரிகள் வெளியேற்றம்
ஐ.நா., சபையில் இருந்து ரஷ்யாவின் 12 துாதரக அதிகாரிகளை மார்ச் 7ம் தேதிக்குள் வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ‘தங்கள் நாட்டில் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவர்களை வெளியேற்றுகிறோம்’ என அமெரிக்க கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, தங்கள் மீதான விரோத போக்கை காட்டுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இணையதளங்கள் முடக்கம்
உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு செய்தி வெளியிட்ட இணையதளங்கள் ரஷ்யாவில் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவில் போருக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதேபோல், போர்க்கள செய்திகளையும் ஏராளாமானோர் படித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, ‘தி நியூ டைம்ஸ்’ உள்ளிட்ட பல பத்திரிகைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், போருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பீரங்கியை இழுத்து செல்லும் விவசாயிஉக்ரைனில் விவசாயி ஒருவர் ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை தன் டிராக்டரில் கட்டி இழுத்துச் செல்லும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு வீடியோவில் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவர் கையாலேயே கண்ணி வெடிகளை அகற்றுகிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Advertisement