முன்னேறும் ரஷிய படைகளை தடுக்க பொதுமக்கள் அதிரடி- கீவ் நகரில் தொடர்ந்து பதற்றம்

கீவ்:
உக்ரைன் ரஷியா இடையே இன்று 7-வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை முழுமையாக கைப்பற்றுவதற்காக ரஷிய படைகள் முன்னேறி வருகின்றனர்.  இதேபோல் உக்ரைனின்  2-வது பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷியா தீவிர தாக்குதலை ரஷியா தொடங்கியுள்ளது. சுமி நகரின் மீதும் ரஷிய விமானப்படை செல் குண்டுகள் பொழிந்து தாக்கி வருகிறது. கெர்சன் நகரை ரஷிய படை கைப்பற்றி உள்ளது.
ரஷிய படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இதுவரை 6 ஆயிரம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரஷிய படையினர் நடத்தி வரும் தாக்குதல்களிலும் ஏராளமான உக்ரைன் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
உயிர் தப்புவதற்காக உக்ரைன் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொளவ்தற்காக மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக நடந்தே செல்லவேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் வகையில் ரஷிய படைகள் இன்று முன்னேறத் தொடங்கினர். மேலும், ரஷிய படையினர் ஸபோரிஷ்யா அணுமின் நிலையத்தை கைப்பற்றப்போவதாக தகவல் வெளியானது. எனவே, அவர்கள் முன்னேறாமல் தடுப்பதற்காக, சேதமடைந்த ரஷிய வாகனங்களை சாலையின் நடுவே வைத்து பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். அணுமின் நிலைய ஊழியர்கள் சாலைகளில் திரண்டுள்ளனர்.
உக்ரைன்-ரஷியா இடையே பெலாரசில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று இரவு 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. பெலாரஸ் – போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.