ஜெனிவா:
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில், அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்கா மற்றும் அல்பேனியா முன்மொழிந்த இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.
இந்த வாக்கெடுப்பை இந்தியா, வங்கதேசம், ஈரான், பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துள்ளன. இத்தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவும், 5 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.