மாஸ்கோ:”உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவது போர் அல்ல; இந்திய அரசு நடத்திய, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ போன்றது தான்,” என, ரஷ்ய அதிபரின் கட்சியில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளோம் என்ற வார்த்தையை ரஷ்யா இதுவரை பயன்படுத்த வில்லை. அதை, ராணுவ நடவடிக்கை என்றே கூறிவருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் கட்சியில், பீஹாரை சேர்ந்த அபய்குமார் சிங் என்பவர் இடம் பெற்றுள்ளார். மருத்துவம் படிக்க ரஷ்யா சென்ற இவர், பின் அங்கேயே வியாபாரம் துவங்கி செல்வாக்கு மிக்க மனிதராக வளர்ந்தார். புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.
ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள குர்ஸ்க் என்ற இடத்தின், ‘டெப்யூடட்’ ஆக தேர்வானார். இது நம் நாட்டின் எம்.எல்.ஏ., போன்றதொரு பதவி.இந்நிலையில், ஹிந்தி தொலைக்காட்சிக்கு அபய்குமார் சிங் அளித்த பேட்டியில், ”உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவது போர் அல்ல; அண்டை நாடுகள் மீது இந்திய அரசு நடத்திய, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் அதிரடி தாக்குதலை போன்றது தான். அப்பாவி மக்கள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தவில்லை,” என்றார்.
Advertisement