உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் போர் உலக நாடுகள் மத்தியில் பதற்றமான நிலை உருவாக்கியுள்ளது, இந்நிலையில் உக்ரைன் மக்கள் மத்தியில் ரஷ்யா மீதான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது.
ரஷ்ய அரசின் இந்தப் போரை எதிர்த்து ரஷ்ய நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், உக்ரைன் மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள வெறுப்புணர்வு, கோபம், சோகம், கண்ணீரை விளக்க வார்த்தைகள் இல்லை.
இந்த நிலையில் ஸ்பையின் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், உக்ரைன் ஊழியர் ஒருவர் ரஷ்ய முதலாளியைப் பழிவாங்கியது தற்போது உலக நாடுகள் முழுவதும் வைரலாகியுள்ளது,
விடாமல் உக்ரைனை வதைக்கும் ரஷ்யா.. 1 மேல் கச்சா எண்ணெய் விலை.. பதற்றத்தில் இறக்குமதி நாடுகள்!

உக்ரைன் ஊழியர் – ரஷ்ய முதலாளி
55 வயதான தாராஸ் ஓஸ்டாப்சுக் (Taras Ostapchuk) உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர், இவர் ரஷ்ய நாட்டின் பணக்கார தொழிலதிபரான அலெக்சாண்டர் மிஜீவ் (Alexander Mijeev)-விடம் பணியாற்றி வந்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய அரசு போர் தொடுத்துள்ள காரணத்தால் தாராஸ் ஓஸ்டாப்சுக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

$7.7 மில்லியன் ஆடம்பர கப்பல்
இந்நிலையில் அலெக்சாண்டர் மிஜீவ்-க்கு சொந்தமான Lady Anastasia எனப் பெயர் கொண்ட 156 அடி நீளம் கொண்ட 7.7 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆடம்பர கப்பலின் பல வால்வுகளைத் திறந்த காரணத்தால் மொத்த கப்பலும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா பகுதியில் தாராஸ் ஓஸ்டாப்சுக் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

ரோசோபோரான் எக்ஸ்போர்ட்
அலெக்சாண்டர் மிஜீவ் ரோசோபோரான் எக்ஸ்போர்ட் (Rosoboronexport) என்னும் ரஷ்யா ராணுவ ஆயுத நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் போர் காரணமாகப் பல லட்சம் உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து நாட்டை விட்டுத் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ரஷ்யப் படையின் தாக்குதல் காரணமாகத் தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ்
உக்ரைன் தலைநகரான கீவ்-ல் ஒரு கட்டிடத்தை ஹெலிகாப்படர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அலெக்சாண்டர் மிஜீவ்-ன் ரோசோபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடையது, இந்தத் தாக்குதல் வீடியோவை பார்த்த பின்பு தான் அலெக்சாண்டர் மிஜீவ்-க்கு சொந்தமான 7.7 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆடம்பர கப்பலை மூழ்கடித்துள்ளார் தாராஸ் ஓஸ்டாப்சுக்.

உக்ரைன் நாட்டு மக்கள்
ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது குண்டு மழை பொழிவது குறித்த செய்தியைப் பார்த்து மனம் உடைந்த தாராஸ் ஓஸ்டாப்சுக் கப்பலை மூழ்கடித்துள்ளதாகப் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் தனது முதலாளி அலெக்சாண்டர் மிஜீவ் உக்ரைன் நாட்டு மக்களைக் கொல்வதற்காக ஆயுதங்களை விற்பனை செய்கிறார் என்றும் திட்டி தீர்த்துள்ளதாகப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி
தாராஸ் ஓஸ்டாப்சுக்-யிடம் நீங்கள் செய்ததற்கு வருந்துகிறீர்களா என்று நீதிபதி கேட்டபோது, அவர் அதை மீண்டும் செய்வேன் என்று கூறினார். தாராஸ் ஓஸ்டாப்சுக் பின்னர்ப் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு ஸ்பெயினை விட்டு வெளியேறினார். 55 வயதான அவர் ஒரு மெக்கானிக்காக இந்தக் கப்பலில் சுமார் 10 வருடமாகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் படை
ஸ்பெயின் நாட்டைவிட்டு வெளியேறிய தாராஸ் ஓஸ்டாப்சுக் தற்போது உக்ரைன் நாட்டுக்கு சென்று ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராகப் போராட உள்ளதாக உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Ukrainian employee sinks Russian boss $7.7 million luxury yacht in Spain, Joining in Ukraine Army
Ukrainian employee sinks Russian boss $7.7 million luxury yacht in Spain, Joining in Ukraine Army ரஷ்யா முதலாளிக்கு ஆப்பு வைத்த உக்ரைன் ஊழியர்.. துளியும் வருத்தம் இல்லையாம்..!