உக்ரைன் மீது ரஷ்யா 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய படைகளுக்கு அதிபர்
விளாடிமர் புடின்
உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. . உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேசுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், பேசப்பட்ட சாராம்சங்கள் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அதேசமயம், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
அமெரிக்கா
, பிரிட்டன் உள்ளிட்ட 21 நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. அதேபோல், தங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த நாடுகள் மீது பதிலுக்கு ரஷ்யாவும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதாரப் போரை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிரிகளை துவம்சம் செய்ய உக்ரைன் அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில்,
ரஷ்ய விமானங்கள்
அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ரஷ்ய விமானங்களுக்கு அமெரிக்க வான்வெளியை மூடுவதில் நாங்கள் எங்கள் கூட்டு நாடுகளுடன் இணைவோம் என்று அந்நாட்டு அதிபர்
ஜோ பைடன்
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பேசியது குறிப்பிடத்தக்கது.