ரஷ்யா ஒரு நாளைக்கு 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி உற்பத்தியை உள்நாட்டு தேவைக்காக இதுநாள் வரையில் பயன்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மீதான போர் காரணமாக இராணுவ உபகரணங்களுக்குக் கூடுதலான எரிபொருள் தேவைகள் காரணமாக உள்நாட்டு தேவை அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்றுமதி செய்யும் அளவீட்டில் தடுமாற்றம் ஏற்பட்டு தினமும் 5 மில்லியன் முதல் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக நாடுகள் ரஷ்யா மீது பல தடைகள் விதித்தாலும், இதுநாள் வரையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால் என்ன ஆகும்..?
காங்கிரஸ்-க்கு வந்த அதே பிரச்சனை இப்போ மோடி அரசுக்கு வந்துள்ளது.. தாக்குப்பிடிக்குமா..?!
ரஷ்யா ஆதிக்கம்
கச்சா எண்ணெய் உற்பத்தியில் தற்போது உலகளவில் ரஷ்யா 2வது இடத்தில். முதல் இடத்தில் சவுதி அரேபியா, 3வது இடத்தில் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது. இதனால் ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஐரோப்பிய நாடுகள்
ரஷ்யாவின் 5-6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 50 சதவீதம் அதாவது 2.5 மில்லியன் பேரல் எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்குத் தான் செல்கிறது. ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, பின்லாந்து, லிதுவேனியா, கிரீஸ், ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது.
சீனா
ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாகச் சீனா விளங்குகிறது. சீனா தினமும் 1.6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. சீனாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்குகிறது.
110 பில்லியன் டாலர் வருமானம்
ரஷ்யா 2021ஆம் ஆண்டில் மட்டும் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தின் வாயிலாகச் சுமார் 110 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது. இது ரஷ்ய அரசின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி வகிக்கிறது. இந்த நிலையில் NATO அமைப்பில் இருக்கும் நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மீது தடை விதித்தால் என்ன ஆகும்..?
இந்தியா, தாய்லாந்து
ரஷ்யா மீது தடை விதிக்காத நாடுகளுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் அனுப்ப முடியும் குறிப்பாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியும், ஆனால் புதிய வழித்தடம், புதிய கட்டமைப்பு ஆகியவை வேண்டும். இதே போலத் தான் ஈரான் நாடும் தற்போது கச்சா எண்ணெய்-ஐ விற்பனை செய்து வருகிறது.
விலை
ஆனால் ஒரு சின்னச் சிக்கல், ரஷ்யா சந்தை விலைக்குக் கச்சா எண்ணெய் விற்க முடியாது, தள்ளுபடி விலையில் தான் விற்பனை செய்ய முடியும். இது ரஷ்யாவுக்குக் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.
சர்வதேச சந்தை
ரஷ்யா உலகிலேயே 2வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருக்கும் நிலையில், பொது வர்த்தகச் சந்தையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இல்லை எனில் காட்டாயம் தட்டுப்பாடு உயர்ந்து WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 120 டாலரை எளிதாகத் தாண்டும்.
How will Russia be affected if rich nations stopped buying its crude oil?
How will Russia be affected if rich nations stopped buying its crude oil? வல்லரசு நாடுகள் ரஷ்யாவுக்கு வைக்கும் புதிய செக்.. புதின் என்ன செய்யப் போகிறார்..!