பிப்ரவரி மாதம் இந்தியாவில் வாகன விற்பனை சந்தையில் சில நிறுவனங்கள் மந்தமான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்தாலும், பல நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையை நீண்ட காலமாகப் பாதித்து வந்த சிப் தட்டுப்பாடு, சப்ளை செயின் பிரச்சனைகள் பிப்ரவரி மாதம் குறைந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்து வரும் காரணத்தால் கார், பைக் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலை அதிகரித்து வரும் காரணத்தால் விற்பனை அளவுகள் கணிசமாகச் சரிந்துள்ளது.
சென்னை நிறுவனத்தின் அதிரடி திட்டம்.. வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சரியான போட்டி..!
கார் விற்பனை
சிப் தட்டுப்பாடு, சப்ளை செயின் பிரச்சனைகளைக் குறைந்தாலும் கார் விற்பனை பிரிவில் முன்னோடியாக இருக்கும் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை சரிவால் ஒட்டுமொத்த கார் விற்பனை சந்தையும் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
பிப்ரவரி 2022
மாருதி சுசூகி 7 சதவீத சரிவு, ஹூண்டாய் 15 சதவீத சரிவு, டாடா மோட்டார்ஸ் 47 சதவீத உயர்வு, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 80 சதவீத உயர்வு, கியா 8.5 சதவீத உயர்வு, டோயோட்டா 38 சதவீத சரிவு, ஹோண்டா 23 சதவீத சரிவு, எம்ஜி மோட்டார்ஸ் 5 சதவீத உயர்வு, ஸ்கோடா 428 சதவீத உயர்வு.
ஸ்கோடா கடந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் 853 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில், தற்போது 4503 கார்களை விற்பனை செய்துள்ளது.
பைக் விற்பனை
ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் இரு சக்கர வாகனத்தின் விற்பனை அதிகரித்தாலும், கடந்த ஆண்டுப் பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் பிப்ரவரி 2022ல் சரிவை சந்தித்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் 4.84 லட்சம் பைக்குகளை விற்பனை செய்த நிலையில் தற்போது 3.31 லட்சம் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
பிப்ரவரி 2022 பைக் விற்பனை
ஹீரோ மோட்டோ கார்ப் 31.5 சதவீத சரிவு, ஹோண்டா மோட்டார் சைக்கிள் 30.5 சதவீத சரிவு, டிவிஎஸ் மோட்டார்ஸ் 11 சதவீத சரிவு, பஜாஜ் ஆட்டோ 35 சதவீத சரிவு, சுசூகி மோட்டார் சைக்கிள் 1.5 சதவீத சரிவு, ராயல் என்பீல்டு 20 சதவீத சரிவு
வர்த்தக வாகனங்கள்
இந்தியாவில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதைக் காட்டும் வகையில் வர்த்தக வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் 9 சதவீத உயர்வு, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 107 சதவீத உயர்வு, பஜாஜ் ஆட்டோ 2 சதவீத உயர்வு, அசோக் லேலாண்ட் 4 சதவீத உயர்வு, டிவிஎஸ் மோட்டார்ஸ் 4 சதவீத உயர்வு.
டிராக்டர் விற்பனை
கடந்த ஆண்டு டிராக்டர் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தால் பிப்ரவரி மாதம் விற்பனை அளவீட்டை ஒப்பிடுகையில் சரிவை சந்தித்துள்ளது
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 30 சதவீத சரிவு, எஸ்கார்ட்ஸ் 47 சதவீத சரிவு.
Kia Beats Hyundai and maruti Suzuki in February sales
Kia Beats Hyundai and maruti Suzuki in February sales ஹூண்டாய், மாருதி சுசூகி-யை ஓரம்கட்டிய கியா.. அடேங்கப்பா..!