10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடக்கவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அமைச்சர் இதுதொடர்பாக இன்று அறிவித்தவற்றில் குறிப்பிடப்பட்டவை:
* செய்முறை தேர்வு: 10, +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 25-04-2022ல் தொடங்கும்
* தேர்வு எப்போது?
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தொடங்கி மே 28-ம் வரை தேர்வு நடைபெறும்
+1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ஆம் தொடங்கி மே 30 -ம் தேதி வரை நடைபெறும்.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மே 5 முதல் மே 13 வரை நடைபெறும்.
image
* பொதுத்தேர்வு முடிவுகள்:
தேர்வுகளைத் தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும்.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மே 5 முதல் மே 13 வரை நடைபெறும்.
image
எந்தெந்த தேதிகளில் என்னென்ன தேர்வுகள் நடக்கும் என்பது பற்றிய அறிவிப்பு, இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியாகுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மத்தியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “டெட் தேர்வுக்காக போராடும் ஆசிரியர் குழுவை சேர்ந்தோரிடம் பேசிவருகிறோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுப்போம். எதையும் எடுத்தோம் முடித்தோம் என்றிருக்க முடியாதென்பதால், சற்று தாமதம் ஆகிறது.
image
நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் ட்யூஷன் எடுப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை கருத்து தெரிவித்திருந்தது. ஆசிரியர்கள், ட்யூஷன் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. பள்ளிகளில்தான் தங்களின் கவனத்தை ஆசிரியர்கள் செலுத்த வேண்டும்” உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: ‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்… படக்குழு உற்சாக அறிவிப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.