கடந்த 6 நாட்களில் கிட்டத்தட்ட 6,000 ரஷ்ய வீரர்களைக் கொன்றுள்ளதாக உக்ரைனிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்யா இராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
தகவல்களின்படி, இதுவரை 5,834 வீரர்கள் இறந்ததாகவும், 30 ரஷ்ய விமானங்கள் அதன் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், பல ரஷ்ய இராணுவ வீரர்களும் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உக்ரைன் கோரியுள்ள மொத்த ரஷ்ய இழப்புகளின் விவரம்:
பிப்ரவரி 24 அன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5,840 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது.
30 ரஷ்ய விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 211 டாங்கிகள், 862 போர் கவச வாகனங்கள், 85 பீரங்கி அமைப்புகள் மற்றும் 9 விமான எதிர்ப்பு சாதனங்கள் (air defence systems) அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் 60 எரிபொருள் டாங்கிகள், 355 வாகனங்கள், 40 ரொக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.