பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் அதிரடி சலுகைகளை மொபைன் போன்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து மலிவு விலைக்கு பயனர்கள் வாங்க முடியும்.
ஆம், புதிய சலுகையாக சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போன் வெறும் ரூ.4,199க்கு விற்கப்படுகிறது. சலுகைகள், தள்ளுபடிகள் அனைத்தையும் பயன்படுத்தினால், இந்த விலைக்கு 5ஜி போனை வாங்கலாம். சலுகை விலையில்
Samsung Galaxy A22 5G
ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளுங்கள்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘Nothing’ டீஸர்!
4199 ரூபாய்க்கு சாம்சங் 5ஜி போன்
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி
ஸ்மார்ட்போனின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.22,499 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சீசன் நேரடி தள்ளுபடியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. மேலும் ,பயனர்கள் Flipkart Axis Bank Credit Card கொண்டு இந்த போனை ஆர்டர் செய்யும்போது கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.999 போனின் விலையில் இருந்து குறைக்கப்படும். இப்போது போனின் விலை ரூ.18,999 ஆக இருக்கும்.
பிளிப்கார்ட் பழைய போன்களுக்கு நல்ல விலை தருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வழங்குகிறது. அதன்படி, பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை Exchange செய்ய விரும்பினால், பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.14,800 வரை பெறலாம். உங்கள் போனின் நிலையை பொறுத்தே Exchange Value நிர்ணையிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் 3 புதிய OLED டிவிக்கள் அறிமுகம்!
போனில் தள்ளுபடி விலையான ரூ.18,999இல், உங்கள் பழைய போனுக்கு கிடைத்த எக்ஸ்சேஞ்ச் விலையை கழித்தால் ரூ.4,199 வரும். எனவே, உங்களின் பழைய போனுக்கு நல்ல வேல்யூ கிடைத்தால், புதிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி போனை நீங்கள் வெறு ரூ.4199க்கு வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் (Samsung Galaxy A22 5G specs)
இந்த ஸ்மார்ட்போனானது 6.6″ அங்குல முழு அளவு எச்டி+ திரையைக் கொண்டுள்ளது. 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் இந்த திரைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ONE UI 2.0 ஸ்கின் உதவியுடன் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 700 5ஜி சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ARM மாலி ஜி57 கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்ட்டின் கிராபிக்ஸ் செயல்பாடுகளுக்கு உதவியாக உள்ளது.
கேமராவைப் பொருத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைக் கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்புடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் f/2.0 கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை 5ஜி சிம் ஆதரவுடன் வருகிறது.
சைலண்டாக அறிமுகமாகும் Nokia போன்கள் – விலையை கேட்டா அசந்து போய்ருவீங்க!
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி பேட்டரி
ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 15W அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஆதரவுடன் ரியல்மி போன் வருகிறது. எஸ்டி கார்ட் ஆதரவுடன் 1TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி உள்ளது.
அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த சாம்சங் போன் கொண்டுள்ளது.
Read More:
வாட்ஸ்அப் Tricks – வாட்ஸ்அப் டெலிட் மெசேஜ் பார்ப்பது எப்படி! PAN அட்டையை Aadhaar உடன் இணைத்துவிட்டீர்களா WhatsApp பயனர்களே உஷார் – சுமார் 18 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா!
Samsung-Galaxy-A22-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Dimensity 700 MT6833டிஸ்பிளே6.6 inches (16.76 cm)சேமிப்பகம்128 GBகேமரா48 MP + 5 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை19999ரேம்6 GBமுழு அம்சங்கள்
Samsung-Galaxy-A22-5GSamsung Galaxy A22 5G 128GB 8GB RAM