Ukraine News: கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 10% அதிகரிப்பு!
ரஷ்ய – உக்ரைன் போரால், கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 10% அதிகரித்தது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 106 அமெரிக்க டாலரை தாண்டியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.
ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை நிறுத்தம்!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு ‘ஆப்பிள்’ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை, ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஐரோப்பிய நாடுகள் உதவி!
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஐரோப்பிய நாடுகள் உதவிகள் செய்யும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் உறுதியளித்துள்ளார்.
Ukraine News Live Updates
உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகள்!
பல்கேரியா, போலந்து, சுலோவாகிய ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை தர முன் வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய வீரர்களுக்கு அனைத்து விளையாட்டு போட்டிகளில் இருந்தும் தடை!
உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை விதித்து உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து 60 சதவிகிதம் இந்தியர்கள் மீட்பு!
மத்திய அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில், கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை. உக்ரைனில் உள்ள 20 ஆயிரம் இந்தியரில்’ 60 சதவிகிதம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். போலந்து சுலோவாகியாவில் இருந்து இனி மீட்பு பணிகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்க அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கம்!
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன; மேலும் 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர, அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மே மாதம் 5ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் 4 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது உடனிருந்த 10 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்
எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகின்றனர் படக்குழுவினர். உக்ரைனில் இருந்து வரும் வீடியோக்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. எல்லாரும் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும் என்று சில நேரம் அமைதியாக வேண்டிக் கொள்ளலாம் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம், படத்தைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை!
கோவை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதேபோல், சென்னை மாநகராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாமன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா தொடங்கியது.
ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு , ஜூலை 7ம் தேதி 11ம் வகுப்பு, ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது. பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை இன்னும் 1 மணி நேரத்தில் http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 616 உயர்ந்து, ரூ. 39 ஆயிரத்துக்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க அனுமதியளித்து சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில்’ ரஷ்ய வான்வெளி வீரர்கள் தரையிறங்கியுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன. உக்ரைனில் இருந்து 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
உக்ரைனின் தலைநகரை சுற்றி ராணுவ வாகனங்களை மட்டுமே புதினால் நிறுத்த முடியும். அதேநேரம் உக்ரைன் மக்களின் இதயங்களை அவரால் எப்போதும் வெல்ல முடியாது.
உக்ரைனுக்கு ராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வழங்கி, நட்பு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றை கைப்பற்றுவோம் -அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான ஆதரவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வாதிகாரிகள் தங்களின் ஆக்கிரமிப்பு செயலுக்கு கண்டிப்பாக விலை கொடுத்தே தீர வேண்டும். மேற்கத்திய நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்து விட்டார். நாங்கள் உக்ரைன் மக்களுடன் நிற்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்றத்தில் பேசினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 3 மாணவர்கள் உட்பட உக்ரைனில் இருந்து 10வது விமானம் இன்று காலை டெல்லி வந்தது.
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளால் தாக்கி வரும் நிலையில், கீவ் நகரில் உள்ள தொலைக்காட்சி டவர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 5 பேர் பலியாகினர்.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. போலந்து வழியாக இன்று மேலும் சில உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து, அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் பதவி, . அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.