பயனர் மேம்பாடு, அவர்களின் பாதுகாப்பு என மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் பல புதுப்புது அம்சங்களை அவ்வப்போது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதனுடன், நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் பயனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
அந்தவகையில், Whatsapp இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும், சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பயனர் கணக்குகளுக்குத் தடை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
வாட்ஸ்அப் கணக்குகளுக்குத் தடை
அந்த வகையில், வாட்ஸ்அப் ஜனவரி மாதத்திற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, வாட்ஸ்அப் கணக்குகளின் மூலம் கொள்கை விதிமீறல்களில் ஈடுபட்ட 18 லட்சத்து 58 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் Tricks – வாட்ஸ்அப் டெலிட் மெசேஜ் பார்ப்பது எப்படி!
பயனர் தரப்பிலிருந்து தெரிவிக்கும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் வாட்ஸ்அப் பரிசீலனை செய்து, தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு கணக்கு தடை செய்யப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்ட கணக்கு மீட்கப்பட்டாலோ குறிப்பிட்ட கணக்கை நிர்வகிக்கும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப்-இல் புகார் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப் மூலம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய இரு வழிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை பதிவு செய்வது. மற்றொன்று குறைதீர்க்கும் அலுவலருக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் பயனர்கள் தங்களின் குற்றச்சாட்டுகளைப் பதிவிடலாம். குறைதீர்க்கும் நெட்வொர்க்கில் பதிவிடப்படும் குற்றச்சாட்டுகள், வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிரத்தியேக டூல்கள் கொண்டு பரிசீலிக்கப்படுகிறது.
தவறான செய்திகளை மொத்தமாக அனுப்புதல் சொற்ப இடைவெளியில் செய்திகளை மொத்தமாகப் பகிர்தல் தவறான நடத்தையில் ஈடுபடுதல். அதிகாரப்பூர்வ செயலியைப் பயன்படுத்தாமல் இருப்பது ஒரு குழுவில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களின் தொடர்புகளைச் சேர்ப்பது தெரியாத எண்களுக்கு விளம்பர செய்திகளை அனுப்புவது மறைமுகமான செய்திகளை அனுப்புவது அல்லது சட்டவிரோத குழுவின் ஒரு பகுதியாக இருப்பது
இந்த 7 தவற மட்டும் பண்ணாதீங்க… உங்க வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும்!
மேற்குறிப்பிட்ட காரணங்களினால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம். உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டால், வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது – “Your phone number is banned from using WhatsApp. Contact support for help.” இதுபோன்ற தகவல் திரையில் தோன்றும். நீங்கள் வாட்ஸ்அப் கொள்கைகளை மீறவில்லை என்றால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம். உடனடியாக உங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
English
|
Marathi
|
Hindi
Read More:
இதுக்கு என்ன Password என்ற குழப்பம் இனி வேண்டாம்! பொது இடத்தில் Wi-Fi பயன்படுத்தும் நபரா நீங்கள் – இத தெரிஞ்சுக்கோங்க!யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி… இத மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க!