உக்ரைன், ரஷ்யா இடையிலான போரால் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரம், மற்றும் பொருளாதாரத்தை இழந்து அடையாளமற்ற அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.வின் முகமை எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து ஏறத்தாழ 9 லட்சம் பேர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் கேட்டு புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் உலகளவில் பெரும் நெருக்கடி ஏற்படக் கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.