அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.
சனிக்கிழமை அதிகாலையில் வார்னின் நிர்வாகம் சுருக்கமான ஒன்றை அறிக்கையை வெளியிட்டது.
அதில், வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் மாரடைப்பால் காலமானார்.
ஷேன் தனது வில்லாவில் எந்தவித அசைவுமின்றி காணப்பட்டார், மருத்துவர்கள் சிறந்த முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் குடும்பம் தனியுரிமையைக் கோருவதால், மேலதிக விவரங்களை உரிய நேரத்தில் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஷேன் வார்ன், 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு (800) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சளார் ஷேன் வார்ன் (708) ஆவார்.
ஷேன் வார்ன் மறைவு குறித்து செய்தி அவுஸ்திரேலிய வீரர்கள் உட்பட அனைத்து கிரிக்கெட் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இந்த செய்தி அமைந்துள்ளது. பலர் ஷேன் வார்ன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.