உக்ரைன்
மீது
ரஷ்யா
போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.
அதேசமயம்,
ஆப்ரேஷன் கங்கா
என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள சுமார் 20,000 இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்திய அரசின் முதல் அறிவுறுத்தலுக்கு பின்னர் 18,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ஆப்ரேஷன் கங்கா மூலம் இதுவரை 30 விமானங்கள் இயக்கப்பட்டு, 6,400 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் 18 விமானங்களை இயக்க திட்டமிடப்படுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை? அப்படி என்ன இருக்கிறது அந்த கொலை ஆயுதத்தில்?
ஆப்ரேஷன் கங்காவை பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட்டு வருகிறார். அதுதவிர, ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினினுடன் பிரதமர் மோடி இரண்டு முறை பேசியுள்ளார். அப்போது, இந்தியர்களை மீட்க உதவுமாறு புடினிடம் மோடி கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலக தெரிவித்தது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்களை மீட்க ரஷ்யா உதவ முன்வந்துள்ளது. உக்ரைனின் கார்கிவ், சுமி மாகாணங்களில் இருந்து ரஷ்யாவின் பெல்கோரேட் பகுதிக்கு இந்திய மாணவர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை அழைத்து செல்ல 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.