சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கு வரும் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் பின்பற்ற வேண்டிய தனிமை கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 செப். முதல் சென்னை டில்லி மும்பை ஆகிய மூன்று நகரங்களில் இருந்து வரும் கொரோனா தடுப்பூசி செலுத்திய விமான பயணியருக்கு சிங்கப்பூர் அரசு தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு அளித்திருந்தது.
இந்நிலையில் சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியதாவது:மார்ச் 16ம் தேதி முதல் சென்னை டில்லி மும்பை ஆகிய நகரங்கள் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூர் வரும் தடுப்பூசி செலுத்திய விமான பயணியர் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
அதுபோல மலேசியாவில் கோலாலம்பூர் மட்டுமின்றி பினாங் நகரில் இருந்து வரும் தடுப்பூசி செலுத்திய விமான பயணியருக்கும் தனிமைப்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் ஜாகர்தா நகர் மட்டுமின்றி பாலி தீவில் இருந்து வருவோருக்கும் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement