இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 6 ஆயிரத்து 396 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 201 பேர் உயிரிழந்த நிலையில், 13 ஆயிரத்து 450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 69 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 69 ஆயிரத்து 897 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.