ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே 8 வருட உயர்வை தொட்டு உள்ளது, இது இந்திய சந்தையை மிகப்பெரிய அளவில் அடுத்த வாரம் முதல் பாதிக்கப்போகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் மிகப்பெரிய கனவான உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்வது மட்டும் அல்லாமல் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
7வது சம்பள கமிஷன்.. ரூ.90,000 வரை சம்பளம் அதிகரிக்கலாம்.. இன்னும் பல சூப்பர் அப்டேட்கள்..!
சாலை கட்டுமானம்
மத்திய அரசு நாட்டின் வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த சாலை கட்டுமானத்தை மிகப்பெரிய அளவில் இந்த ஆண்டு விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் முட்டுக்கட்டையாக விளங்குகிறது.. எப்படித் தெரியுமா..?!
வரி வருமானம்
கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு கட்டாயம் ஆரம்பத்தில் விலையைத் தாறுமாறாக உயர்த்துவதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. எரிபொருள் விலையால் கட்டாயம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கும் என்பதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனையில் விதிக்கப்படும் roads and infrastructure cess (RIC)-ஐ கட்டாயம் குறைக்கும்.
மத்திய அரசு
சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புச் செஸ் (ஆர்ஐசி) மூலம் பெறும் வரி வருமானத்தைத் தான் மத்திய அரசு நாட்டின் சாலை கட்டுமான திட்டத்திற்கு அளித்து வருகிறது. எரிபொருள் விலை குறைக்க RIC வரியைக் குறைத்தால் இப்பிரிவில் கிடைக்கும் வருமானம் குறைந்து சாலை கட்டுமானத்திற்கு நிதியுதவி செய்ய முடியாது.
வரி அளவு உயர்வு
2018ஆம் நிதியாண்டில் RIC மூலம் கிடைக்கும் வருமானத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பின் மொத்த பட்ஜெட் தொகையில் 28.4%, இது 2022ஆம் நிதியாண்டில் 32 சதவீதமாக உயர்ந்து எந நோமுரா ஆய்வறிக்கை கூறுகிறது. 2015ஆம் நிதியாண்டில் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் மட்டுமே RIC வரி வருமானமாக இருந்த நிலையில் செப்டம்பர் 2021ல் இதன் அளவு லிட்டருக்கு 18 ரூபாயாக அதிகரித்தது.
crude oil prices may impact road infra funding in FY23
crude oil prices may impact road infra funding in FY23இந்திய-வின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை.. என்ன காரணம் தெரியுமா..?