சுற்றுலா இலங்கை அணிக்கும், இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்போது மொஹாலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 2 விக்கட் இழப்பிற்கு விக்கட் இழப்பின்றி, 139 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.. இதனைத்தொடர்ந்து இரண்டு போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது.
சர்வதேச டெஸ்ட் பிரிக்கெட் வெற்றிக்கிண்ணத்திற்கு Championship உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய அணி வீரர் விராட் கோலி தலைமை பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும்இ மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.
இதேவேளை ,இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு இது மிக நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம். என்னைப் பொறுத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். எனது பயிற்சியாளரும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.
நான் தனிப்பட்ட முறையில் குறைந்த ஓட்டங்களை இலக்காக கொண்டு ஒருபோதும் விளையாடியதில்லை. நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.
எனவேஇ நீண்ட நேரம் பேட்டிங் செய்து வெற்றி பெற வேண்டும் அல்லது முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இதை தான் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். இது போன்ற விஷயங்கள் உங்கள் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்..