உக்ரைன் நாட்டிற்கு 25 சதவீத மின் விநியோகத்தை வழங்கும் சபோரோஷியா, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக கருதப்படுகிறது. சபோரோஷியா வெடித்தால் அது செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், சபோரோஷியா அணுமின் நிலையத்தை முழுமையாக கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அணுமின் நிலையம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 3 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் ஜெனரல் ரஃபேல் மரியானோ கூறினார்.
இதையும் படியுங்கள்..
9-வது நாளாக சண்டை நீடிப்பு- கீவ், கார்கிவ் நகரங்களில் ரஷிய படைகள் திணறல்