உக்ரைன் ராணுவம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்து அவர்களை வெளியேற விடாமல் தடுத்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
நேற்று தொலைக்காட்சி நேரலையில் பேசிய அவர், வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கு ரஷ்யா முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதியளித்தார். மனிதக் கேடயமாக இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வருவதாகவும் புதின் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே இதே புகாரை தெரிவித்த புதினுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் புதின் மனித கேடயமாக மாணவர்கள் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்